வெள்ளி, 26 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 25 மே 2017 (12:32 IST)

ஆஃப்லைனில் 12 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய் சம்பாதித்த சியோமி!!

ஆஃப்லைனில் 12 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய் சம்பாதித்த சியோமி!!
சியோமி நிறுவனம் பொதுவாக ஆன்லைனில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வந்தது. சமீபத்தில் பெங்களூருவில் ஆஃப்லைன் விற்பனை மையத்தை துவங்கியது.


 
 
எம்ஐ ஹோம் என அழைக்கப்படும் இந்த விற்பனை மையத்தில் 12 மணி நேரத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இந்திய ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆஃப்லைன் வரலாற்றில் முதல் முறையாக இவ்வாறு அரங்கேறியுள்ளது. 
 
இந்த வரவேற்பை தொடர்ந்து எம்ஐ ஹோம் ஸ்டோர்களை சென்னை, ஹைதராபாத், டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களிலும் துவங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.