பாதிக்கு பாதி விலையில் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்!
நோக்கியாவின் 5ஜி ஸ்மார்ட்போன் மற்ற நிறுவனங்களில் 5ஜி ஸ்மார்ட்போனை விட குறைந்த விலையில் வெளியாகும் என தெரிகிறது.
அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் நிலையில் இந்தியாவிலும் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில், ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா பிராண்டிங்கின் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. இது அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என நோக்கியா அதிகாரி ஜூஹோ சர்விகாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்மார்ட்போனின் விலை குறித்து அவர் வெளியிட்ட தகவல் பின்வருமாறு, நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை குறைவாகவே நிர்ணயிக்கப்படும்.
அதாவது தற்சமயம் விற்பனையாகும் 5ஜி ஸ்மார்ட்போன்களை விட நோக்கியா 5ஜி மொபைல் விலை பாதியாக நிர்ணயிக்கப்படும். நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் விலை இந்திய மதிப்பில் ரூ.35,600 முதல் ரூ.42,700 வரை நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.