செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 13 ஜூலை 2017 (14:18 IST)

ஃப்ளிப்கார்ட்டில் ரூ.999 விற்பனைக்கு வந்துள்ள மோட்டோ இ4 பிளஸ்

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ4 பிளஸ் ஸ்மாட்ர்போன் ஃப்ளிக்கார்ட் தளத்தில் பரிமாற்ற சலுகையில் ரூ.999 விற்பனைக்கு வந்துள்ளது.


 

 
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் நேற்று இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. விற்பனை உரிமையை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் அமேசான் நிறுவனத்துக்கு போட்டியாக அவ்வப்போது அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது.
 
இந்நிலையில் மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.999க்கு சலுகை விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சந்தை விலை ரூ.9,999. தற்போது ரூ.9000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக பைபேக் கியாரண்டியின் கீழ் ரூ.4000 வரை வழங்கப்படுகிறது.