பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஹானர் 8X: விவரம் உள்ளே...
ஹுவாய் நிறுவனத்தின் கிளை பிராண்டான ஹானர் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஹானர் 8X ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஹானர் 7X-யின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும்.
இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 5, சியோமி Mi ஏ2, மோட்டோரோலா ஒன் பவர், நோக்கியா 6.1 பிளஸ் ஆகியவற்றிற்கு போட்டியாக பார்க்கப்படுகிறது. அக்டோபர் 24 ஆம் தேதி முதல் ஹானர் 8X பிரத்யேக விற்பனை அமேசான் தளத்தில் துவங்குகிறது.
ஹானர் 8X சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் கிரின் 710 12nm பிராசஸர், மாலி-G51 MP4 GPU
# 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி; 6 ஜிபி ராம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த EMUI 8.2
# 20 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
# 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
# 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# கைரேகை சென்சார், 3750 எம்ஏஹெச் பேட்டரி
ஹானர் 8X விலை:
4 ஜிபி ராம், 64 ஜிப. மெமரி மாடலின் விலை ரூ.14,999,
6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.16,999,
6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.18,999.