திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 26 ஜூன் 2019 (17:26 IST)

இதுதான் சியோமி சிசி9 ஆ? லீக்கான புகைப்படம்...!!

சியோமி சிசி9 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்னரே ஸ்மார்ட்போன் குறித்த தகவலும் புகைப்படங்களும் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. 
 
சியோமியின் புதிய சிசி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜூலை 2 ஆம் தேதி அறிமுகமாக இருந்தது. ஆனால், இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் தற்போது இணையத்தில் லீக்காகி உள்ளது. 
 
இதற்கு முன்னர் சியோமி சிசி9இ ஸ்மார்ட்போனின் விவரங்கள் கடந்த வாரம் வலைதளத்தில் லீக் ஆனது. அதில் இந்த ஸ்மார்ட்போன் 32 எம்பி செல்ஃபி கேமரா, பின்புறம் 48 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்தது. 
அதோடு சிசி9 மெய்டு கஸ்டம் எடிஷன் ஸ்மார்ட்போனில் ஃப்ளிப் கேமரா வழங்கப்பட இருக்கிறது என்றும் கூறப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் லிட்டில் ஃபேரி என்றும், லிட்டில் பிரின்ஸ் என்ற குறியீடோடு உருவாகி வருகிறது.