ரெட்மியின் புது வரவு கில்லர் 20 (K20): எதிர்பார்ப்புகள் என்ன?

Last Updated: புதன், 15 மே 2019 (12:54 IST)
சியோமி நிறுவனம் ரெட்மி பிராண்டின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான (K20) குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
 
ரெட்மி தலைவர் லு வெய்பிங் ரெட்மி ஸ்மார்ட்போனின் புது வரவான K20 குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் K என்ற வார்த்தை கில்லர் என்பதை குறிக்குமாம். மேலும், ஸ்மார்ட்போன் குறித்து எதிர்பார்க்கபப்டும் சில தகவல்களும் வெளியாகியுள்ளது. அவை... 
 
1. 6.39 இன்ச் FHD பிளஸ், நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
2. அதிகபட்சம் 8 ஜிபி ராம், 256 ஜிபி மெமரி, 
3. MIUI10 சார்ந்த ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், 
4. 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 
5. 13 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், 20 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா 
6. அதிநவீன இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 


இதில் மேலும் படிக்கவும் :