புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2019 (13:38 IST)

காரின் விலை இவ்வளவு லட்சம் குறைவா? – மாருதி அறிவிப்பால் வாய் பிளந்த வாடிக்கையாளர்கள்!

இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்துவரும் மாருதி சுஸுகி நிறுவனம் தனது மாடல் கார்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் உற்பத்தி நிறுவனங்கள் பல பாதிக்கப்பட்டன. முக்கியமாக ஆட்டோமொபைல்ஸ் துறை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன. கார் நிறுவனங்களின் விற்பனை ஒரே அடியாக 46 சதவீதம் குறைந்து போனது. இதனால் பல ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். ஜி.ஏச்.டி வரிவிதிப்பில் தளர்வு அளித்தால் இந்த சூழலை சமாளிக்க இயலும் என தொழிலதிபர்கள் தெரிவித்தனர்.

சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்து அறிவிப்பை வெளியிட்டார். அதை தொடர்ந்து மாருதி சுஸுகி நிறுவனம் தங்களது கார்களின் விலையை குறைக்க தொடங்கியுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “எங்களுக்கு அளிக்கப்பட்ட வரித்தளர்வை வாடிக்கையாலர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்” என்று கூறியுள்ளனர்.

மாருதி தொடக்கவிலை லக்சரி கார்கள் 5000 முதல் விலை குறைக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் மாருதி நிறுவனத்தின் டாப் மாடல்களில் ஒன்றான பலேனோ கார் 1 லட்சம் ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதுப்போன்ற அதிரடி விலை குறைப்பினால் கார் விற்பனை அதிகரிக்கும் எனவும், மக்கள் கார்கள் வாங்க ஆர்வம் காட்டுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.