1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (14:10 IST)

விலை குறைத்தாலாவது விற்பனையாகுமா?: மாருதி கார்கள் விலைக்குறைப்பு

ஆட்டோமொபைல்ஸ் துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலையால் தங்களது வாகனங்களை குறைந்த விலையில் விற்க முன்வந்திருக்கிறது மாருது சுஸுகி நிறுவனம்.

கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் ஆட்டோ மொபைல்ஸ் துறை பெரும் சரிவை சந்தித்தது. இதனால் பல நிறுவன ஊழியர்கள் வேலை இழந்தனர். டிவிஎஸ், சுஸுகி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி அளவை குறைத்து கொள்ள தொடங்கின. இந்த பாதிப்புக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பே காரணம் என சொல்லப்பட்டது.

சமீபத்தில் கோவாவில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டன. தற்போது ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனங்கள் மீதான் வரிகளில் சிறிது தளர்வு ஏற்பட்ட்டிருக்கிறது. இந்நிலையில் விற்பனையை அதிகரித்தால் மட்டுமே நிறுவனத்தை நிலைநிறுத்த முடியும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மாருது சுஸுகி நிறுவனம் தனது கம்பெனி கார்களுக்கு 5000 முதல் தள்ளுபடியை அறிவித்துள்ளது. கார் மாடல்களை பொறுத்து தள்ளுபடியும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால் மீண்டும் கார் விற்பனை பழைய நிலைக்கு திரும்பும் என மாருதி நிறுவனம் நம்புகிறது. தொடர்ந்து பல நிறுவனங்களும் தங்கள் வாகனங்களுக்கு விலைக்குறைப்பு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.