வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (11:29 IST)

ஜியோ டிவி ஆப்: 15 பிராந்திய மொழிகளில் 432 லைவ் ஸ்ட்ரீம் சேனல்கள்!!

ஜியோ நிறுவனம் ஒரு சிறந்த தொலைதொடர்பு ஆபரேட்டராக மட்டுமின்றி ஜியோ ம்யூசிக், ஜியோ மூவீஸ், ஜியோ டிவி போன்ற பல சேவைகளை வழங்குகிறது. 


 
 
ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ டிவி ஆப் 15 பிராந்திய மொழிகளில் 432 லைவ் டிவி ஸ்ட்ரீம் சேனல்களை வழங்கவுள்ளது.
 
முன்னர் ஜியோ பிளே என அழைக்கப்பட்ட ஜியோ டிவி ஆரம்பத்தில் வெறும் ஐந்து சேனல்களுடன் ஐந்து முதல் ஆறு மொழிகள் ஆதரவுடன் தொடங்கப்பட்டது. 
 
ஆனால் இப்போது 8 வணிக செய்தி சேனல்கள், 31 பக்தி சேனல்கள், 100 பொழுதுபோக்கு சேனல்கள், 27 இன்போடைன்மெண்ட் சேனல்கள், 23 கிட்ஸ் சேனல்கள், 12 வாழ்க்கை முறை சேனல்கள், 38 மூவி சேனல்கள், 34 மியூசிக் சேனல்கள், 139 நுயுஸ் சேனல்கள் மற்றும் 20 விளையாட்டு சேனல்கள் என மொத்தம் பத்து பிரிவுகளில் உள்ளன.
 
மொழிகளின் அடிப்படையில் ஹிந்தி (148), ஆங்கிலம் (62), தெலுங்கு (49), தமிழ் (39), மலையாளம் (26), கன்னடம் (22), மராத்தி (17), ஒரியா (16), பெங்காலி (14), அஸ்ஸாமி (12), குஜராத்தி (9), பஞ்சாபி (6), உருது (6), போஜ்பூரி (5), நேபாளி (1) ஆகிய சேனல்களை கொண்டுள்ளது.