54 ரூபாயில் ஜியோ கேபிள் டிவி: கதறும் போட்டி நிறுவனங்கள்!!


Sugapriya Prakash| Last Updated: சனி, 22 ஜூலை 2017 (19:13 IST)
40 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து வந்த ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ கேபிள் டிவி சேவை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 
 
ஜியோ போன் கேபிள் டிவி சேவை மாதம் ரூ.309 என்ற கட்டணத்தில் கிடைக்கும். ஒரு வாரத்திற்கு 54 ரூபாயும், இரண்டு நாட்களுக்கு 24 ரூபாய் என கட்டணத்தை அறிவித்துள்ளது.
 
இதனால் ஏர்டெல் டிடிஎச், வீடியோகான் டிடிஎச், சன் டிடிஎச், சன் நெக்ஸ்ட் ஆகிய சேவைகளை அளித்து வரும் நிறுவனங்களுக்கு  ரிலையன்ஸ் ஜியோவின் இந்த சேவை சவாலாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
 
தொலைதொடர்பு நிறுவனங்கள் ஜியோ இலவச சேவைகள் மற்றும் குறைந்த கட்டண விதிப்புகளாக் அவதிப்பட்டு வரும் நிலையில் ஜியோவின் இந்த அடுத்த அறிவிப்பு போட்டி நிறுவனங்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :