செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By anandakumar
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (00:37 IST)

ஜெ ஜெயலலிதா பிறந்தநாள்...மினி பேருந்துகளும் இன்று ஒருநாள் இலவசம்!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி சார்பாக கரூரில் இயங்கும் அனைத்தும் மனி பேருந்துகளும் இன்று ஒருநாள் இலவசமாக பயணிகளுக்கு இயக்கப்படுகிறது.

கரூரில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி சார்பாக கரூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மினி பேருந்துகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று காலை 7 முதல் இரவு 10 மணி வரை ஒரு நாள் மட்டும் இலவசமாக இயக்கப்படுகிறது முன்னதாக மினி பேருந்து நிலையத்திற்கு  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் கரூர் மாவட்டத்தில் இயங்கும் 50 மேற்பட்ட மனி பேருந்துகள் இயக்கப்படுகிறது இதனை அதிமுக கட்சியின் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் ஆட்டோ ரெங்கராஜ் சிறப்பாக செய்திருந்தார் இந்த மினி பேருந்து சேவையை மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மத்திய நகர செயலாளர் வை. நெடுஞ்செழியன் கொடியசைத்து துவங்கி வைத்தனர் இன்று ஒரு நாள் இலவசம் என்பது பயணிகளின் இடையே வரவேற்பை பெற்றுள்ளது மேலும் கரூர் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் வடக்கு நகர செயலாளர் பாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசூதன்,அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி நிர்வாகிகள் ஏன ஏராளமானோர் பங்கேற்றனர்.