உடனடி கடன் வேண்டுமா? இதோ இருக்கு 5 பெஸ்ட் ஆப்ஸ்!

Last Updated: சனி, 3 நவம்பர் 2018 (12:16 IST)
கடன் வேண்டும் என்றால் வங்கியை அனுகவேண்டும் என்ற நிலை மாறி தற்போது மொபைல் ஆப்ஸ்களிலும் கடன் பெற்றுக்கொள்ளளாம் என்ற நிலை உருவாகியுள்ளது. தற்போது உடனடி பணத்தேவைக்கு கடன் வழங்கிம் 5 பெஸ்ட் ஆப்ஸ்களை பற்றி தெரிந்த்துக்கொள்வோம்.
 
1. ஸ்மார்ட் காயின் (Smart Coin): 
# ஸ்மார்ட் காயின் செயலியை பயன்படுத்தி கடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்த உடனேயே, அதே நாளில் தனிநபர் கடன் பெற இயலும். 
# இந்த செயலியில் வங்கி தகவல்கள், அடையாள ஆவணம், கடன் தொகையை மட்டும் பதிவேற்றம் செய்தால் போதும்.
# ஸ்மார்ட்காயின் செயலியில் ரூ.1000 முதல் ரூ.50,000 வரை கடன் பெறலாம். 
 
2. கேபிடல் பர்ஸ்ட்(Capital First): 
# கேபிடல் பர்ஸ்ட் செயலி தனிநபர் கடன், தொழில் கடன் அல்லது வாகனக் கடன் என அனைத்தையும் விண்ணப்பிக்க அனுமதிக்கும்.
# கடன் சம்பந்தப்பட்ட அனைத்து வித தகவல்கள், கடன் சலுகைகள் குறித்த அறிவிப்புகள் என எல்லாம் அடிக்கடி தெரியப்படுத்தப்படும். 
 
3. கிரீடி (Credy): 
# கிரீடி செயலியில், வெறும் ஒரு நிமிடத்தின் கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுகிறது. ரூ.10,000 முதல் ரூ.1,00,000 வரை கடன் வழங்கபப்டுகிறது. 
# மாதம் 1 - 1.5% வரை வட்டி விதிக்கப்படுகிறது. குறிப்பாக பயனரின் மாத சம்பளம் குறைந்தபட்சம் ரூ.15,000 இருக்க வேண்டும். சென்னை அல்லது பெங்களூரில் வசிக்கும் நபராக இருக்க வேண்டும். 
 
4. கேஷ் இ (Cash E): 
# கேஷ் இ உடனடி கடன் செயலி, 15 நாட்கள் என்ற மிக குறுகிய காலத்திற்கு கடன் வழங்குகிறது. 
# ரூ.10,000 முதல் ரூ.2,00,000 என்ற வரம்பில் கடன் வழங்குகிறது. பான் எண், முகவரி ஆவணம், சமீபத்திய சம்பள சான்றிதழ், வங்கிக்கணக்கு ஆவணம் போன்ற 5 ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். 
 
5. கேஷியா (Cashiya): 
# கேஷியா குறுகிய கால தனிநபர் கடனை வழங்குவது மட்டுமில்லாமல், வரவு மற்றும் செலவுகளை மேலாண்மை செய்யவும் பயன்படுகிறது. 
# இந்த செயலியை பயன்படுத்தி மருத்துவக் காப்பீடு, கார் அல்லது இருசக்கர வாகன காப்பீடு போன்றவற்றை வாங்க முடியும். 
# முதலீடுகள் மற்றும் பணி ஓய்வு பெற்றபின் இருக்கும் சேமிப்புகள் போன்றவற்றை திட்டமிட முடியும்.


இதில் மேலும் படிக்கவும் :