ரூ.749 மட்டுமே: ரெட்மி நோட் 5 ப்ரோ இன் பிளிப்கார்ட் சேல்!

Last Updated: வெள்ளி, 2 நவம்பர் 2018 (11:36 IST)
பிளிப்கார்ட் நிறுவனம் தனது தீபாவளி விற்பனையை துவங்கியுள்ளது. பிளிப்கார்ட் பிக் தீவாளி சேல் என்ற பெயரில் நவம்பர் 1 முதல் 5 ஆம் தேதி வரை உள்ள இந்த விற்பனையில் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி, சியோமி நிறுவனத்தின் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மீது நம்ப முடியாத சலுகை விற்பனை வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 5 ப்ரோ இந்திய சந்தையில் ரூ.14,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. 
 
ஆனால், தற்போது பிளிப்கார்ட் சேலில் ரெட்மி நோட் 5 ப்ரோ ரூ.749-க்கு வழங்கப்பட்டுகிறது. சியோமி நிறுவனம், ரூ.2,000 சலுகை வழங்கி ரூ.12,999-க்கு ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. 
 
அதோடு, எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் போது 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. எக்ஸ்சேஞ் சலுகையில் ரூ.12,250 வரை குறைக்கப்பட்டு ரெட்மி நோட் 5 ப்ரோ ரூ.749-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ரூ.749-க்கு ஸ்மார்ட்போன் வாங்க சில நிபந்தனைகள் உள்ளது. 

 
சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 5.99 இன்ச் உடன் கூடிய 2160x1080 பிக்சல் கொண்ட புல் எச்டிபிளஸ் 18:9 விகித 2.5டி கர்வுடு கிளாஸ் டிஸ்ப்ளே 
# 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், அட்ரினோ 509 GPU  
# 4 ஜிபி / 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் உடன் கூடிய MIUI 9 இயங்குதளம் 
# 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல் டோன் எல்டி பிளாஷ் 
# 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர் - 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எ
# கைரேகை சென்சார், இன்ப்ராரெட் சென்சார், டூயல் சிம் ஸ்லாட், 4000 எம்ஏஎச் பேட்டரி


இதில் மேலும் படிக்கவும் :