1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 17 நவம்பர் 2018 (14:48 IST)

5ஜி ஸ்மார்ட்போன்... முந்திக்கொண்ட ஹூவாய் நிறுவனம்!

ஹூவாய் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் 2019 ஆம் ஆண்டு மொபைல் காங்கிரஸ் விழாவில் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதற்கு முன்னர் ராயோல் நிறுவனம் ஃபிலெக்ஸ்பை என்ற பெயரில் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. அதன் பின்னர் சாம்சங் நிறுவனம் தனது மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும் என்பதை வெளிக்காட்டியது. 
 
தற்போது இவை அனைத்திற்கும் ஒருபடி மேல் சென்று ஹூவாய் நிறுவனம், 5ஜி மடிக்ககூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இது ஹூவாயின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாகவும் இருக்கும் என தெரிகிறது. 
 
ஸ்மார்ட்போனுக்கு ஏற்றவாறு, ஹூவாய் புதிய பேட்டரி மற்றும் போட்டோ தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முதலீடு செய்து வருவதாகவும் தகவ்ல் வெளியாகியுள்ளது. 
 
ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் எனவும் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.