1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By

இ பான் என்றால் என்ன? எவ்வாறு விண்ணப்பிப்பது?

பான் கார்ட் அனைவருக்கும் தெரியும், இ பான் என்றால் என்ன? அதை எவ்வாறு விண்ணப்பித்து பெருவது ஆகியவற்றை தெரிந்துக்கொள்ளௌங்கள்... 
 
பான் கார்ட் ஒருவருடைய வருமானம், வருமானத்துக்கான ஆதாரம், செலுத்திய வரி போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும், ஆய்வு செய்வதற்கும் உதவுகிறது. ஒவ்வொருவருக்கு பான் எண் வழங்கப்படும். இது ஒருவரின் தனிப்பட்ட அடையாளமாகும். 
 
இதே, டிஜிட்டல் கையெழுத்துடன், மின்னணு வடிவத்தில் பெறக்கூடிய பான் கார்ட்த்தான் இ பான் என அழைக்கப்படுகிறது. ஏற்கனவே பான் கார்ட் வைத்திருப்பவர்களும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இ பான் கார்டை பெறலாம். 
எவ்வாறு விண்ணப்பிப்பது? 
இந்திய வருமானவரித் துறையின் இணையத் தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதார் அவசியம். 
 
வாடிக்கையாளரைப் பற்றிய தகவல்கள் (KYC) உங்களுடைய மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். மேலும், கடவுச் சொல் மூலம் உறுதி செய்யப்படும். 
 
மேலும், புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை உரிய வகையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 
 
ஆதார் எண்ணில் உள்ள தகவல் தொகுப்பின் அடிப்படையில் இ பான் கார்ட் வழங்கப்படும். 
 
குறிப்பு: ஏற்கனவே பான் அட்டை இல்லாதவர்கள் இ பான் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இ பான் அட்டை பெற்றவர்களுக்கு பிசிகல் பான் கார்ட் வழங்கப்படாது.