வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 5 டிசம்பர் 2018 (20:41 IST)

பான் கார்ட்டில் திடீர் மாற்றங்கள்: வருமான வரித்துறை அதிரடி!

பான் கார்ட் தற்போது மக்களின் முக்கிய ஆவணமாக மாறியுள்ளது. வங்கி நடவடிக்கைகள் அனைத்திற்கும் பான் கார்ட் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. 
 
இந்த பான் கார்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள 10 இலக்க எண் இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் தனி அடையாளமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வருமான வரித்துறை இன்று முதல் சில முக்கிய மாற்றங்களை பான் கார்ட்டில் கொண்டுவந்துள்ளது. 
பான் கார்ட்டில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் இன்று முதல்  அமலுக்கு வருகிறது. 
 
புதிய மாற்றங்கள்:
1. குறிப்பிட்ட காலத்துக்குள்தான் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க  முடியும். அதுபோல, குறிப்பிட்ட காலத்துக்குள்தான் பான் கார்டு வழங்கப்படும். அதாவது, ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் 31க்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும். 
 
2. நிறுவன இயக்குனர், பங்குதாரர், நிர்வாக இயக்குனர், டிரஸ்டி, எழுத்தாளர், நிறுவனர், தலைமை செயல் அதிகாரி, முதன்மை அதிகாரி, நிர்வாகிகள் என்று பொறுப்பில் இருப்பவர்கள் கண்டிப்பாக பான் கார்டு வைத்திருக்க வேண்டும். 
 
3. மொத்த விற்றுமுதல், விற்பனை, மொத்த வருமானம் ஆகிய இனங்களில் நிதி ஆண்டில் 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தாலும், பான் கார்டு முக்கியம். 
 
4 கணவரை பிரிந்து வாழ்பவரின் பிள்ளைகள் பான்கார்டில் தந்தை பெயரை குறிப்பிட தேவையில்லை. 
 
5 வங்கி கணக்கு துவக்கவோ, வருமான வரி ரிடர்ன் பூர்த்தி செய்யவோ பான் கார்டு எண் கட்டாயம்.