திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (11:14 IST)

ஜிமெயில் கணக்கை என்க்ரிப்ட் செய்வது எப்படி? தெரிஞ்சிகோங்க!!

கூகுளின் மின்னஞ்சல் சேவை பாதுகாப்பாக இருக்கிறது என்றாலும் அதனை என்க்ரிப்ட் செய்வது மிகவும் அவசியமானது. 


 
 
தற்போது பெரும்பாலான செயலிகளில் என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜிமெயிலிலும் என்க்ரிப்ஷன் செய்ய முடியும். 
 
என்க்ரிப்ஷன் வழிமுறைகள்:
 
ஃபயர்பாக்ஸ் பிரவுசர் வாடிக்கையாளர்கள்:
 
# இண்டர்நெட் சேவையை பயன்படுத்த ஃபயர்பாக்ஸ் பிரவுசரை பயன்படுத்தி add-ons on Firefox சேவையை பயன்படுத்தலாம். 
 
# இந்த சேவையில் கிடைக்கும் Encrypted Communications Extension-யை ஃபயர்பாக்ஸ் பிரவுசரில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
 
# பின்னர் ஃபயர்பாக்ஸ் பிரவுசரை க்ளோஸ் செய்து மீண்டும் ஓபன் செய்ய வேண்டும். 
 
# பிறகு ஜிமெயில் சென்று மின்னஞ்சலை கம்போஸ் செய்து, ரைட்-கிளிக் செய்தால் Encrypt Communication ஆப்ஷனை பார்க்க முடியும்.
 
# அதில் பாஸ்வேர்டு பதிவு செய்து ஓகே பட்டனை கிளிக் செய்தால் ஜிமெயில் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கும். 
 
கூகுள் க்ரோம் வாடிக்கையாளர்கள்:
 
# கூகுள் க்ரோம் பயன்படுத்துபவர்கள் Safe Gmail பயன்படுத்தலாம். 
 
# முதலில் குரோம் பிரவுசரில்  Safe Gmail இன்ஸ்டால் செய்து பிரவுசரை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். 
 
# பின்னர், ஃபயர்பாக்ஸ் பிரவுசரை போன்றே ஜிமெயிலில் மின்னஞ்சல் அனுப்பலாம். 
 
இவை இரண்டிலும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மின்னஞ்சலை டீக்ரிப்ட் செய்ய எக்ஸ்டென்ஷன் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.