1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 மார்ச் 2017 (12:29 IST)

வருமானத்தை உயர்த்தி லாபத்தை வாரி வழங்கும் நான்கு திட்டங்கள்!!

நாளுக்கு நாள் மனிதனின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள வருமானத்தை உயர்த்தி லாபத்தை அதிகரிக்க செய்யும் சில திட்டங்கள் இதோ...


 
 
பங்கு சந்தை:
 
பங்குச்சந்தை முதலீடு பணத்தை இரட்டிப்பாக்குவதற்கான விரைவான வழி. பங்குகளை தரகரிடம், நிதி திட்டமிடும் ஆலோசகரிடம் அல்லது இணையதளத்தில் வாங்கலாம். 
 
பணம் தேவைப்பட்டால் பங்குகளை எப்போது வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம். ஆனால் எவ்வளவு அதிகம் லாபம் அளிக்கின்றதோ அதே அளவு பணத்தை இழக்கவும் நேரிடலாம். 
 
பத்திர முதலீடு: 
 
நிலையான வருமானத்தை ஈட்ட பாதுகாப்புப் பத்திரங்களில் முதலீடு செய்தல் பயன்படுகிறது. 
 
பாதுகாப்புப் பத்திரங்கள் மற்றும் நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்தல் வட்டி கூட்டுதல் சட்டத்தின்படி நீண்ட காலத்திற்கு வருமானத்தை இரட்டிப்பாக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடன் கொடுத்தல்: 
 
பணத்தைக் கடனாகக் கொடுத்தல் சில தரப்பினருக்கு பணத்தை இரட்டிப்பாக்க மற்றொரு விரைவான வழியாகும். 
 
இதன் மூலம் ஒரு குறுகிய கால வரையறைக்குள் வருமானத்தை இரட்டிப்பாக்கலாம். ஆனால் கொடுத்த கடனை வசூலிக்க திறமை வேண்டும்.
 
மனை வாங்கல் விற்றல்: 
 
மனை வாங்கி விற்கும் தொழிலில் குறைந்தபட்சம் 5 வருடங்களில் பணத்தை இரட்டிப்பாக்களாம். 
 
இதில் பணப்புழக்கம் நிலையானது மற்றும் முன்கூட்டிக் கணிக்கக் கூடிய ஒன்ராகும்.