வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2017 (10:08 IST)

ரிலையன்ஸ் ஜியோ தயவில், மறைமுகமாக ஜியோவையே மிஞ்சிய பேஸ்புக்!!

ரிலையன்ஸ் ஜியோ இலவச 4ஜி சேவை வழங்குவதால், பேஸ்புக் இணையதள நிறுவனத்திற்கு மறைமுகமாகப் பல மடங்கு வருமானம் கிடைத்துள்ளது.


 
 
ஜியோவின் இலவச சேவையை பயன்படுத்தி பலரும் பேஸ்புக் இணையதளத்தை அதிகம் பார்வையிடுகின்றனர். அதன் வழியே, ஆன்லைன் ஷாப்பிங் செய்யவும் தொடங்கியுள்ளனர். 
 
இதனால், ஜியோ நிறுவனத்தைவிட பேஸ்புக் நிறுவனத்திற்கே, அதிக வருமானம் கிடைப்பதாகவும், கடந்த சில மாதங்களில் மட்டுமே பேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் வியத்தகு வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
டிசம்பர் காலாண்டில் பேஸ்புக்கின் மொத்த வருவாய் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டின் டிசம்பர் காலாண்டு வருவாய் 5.8 பில்லியன் டாலராக இருந்தது. அது கடந்த ஆண்டின் டிசம்பர் காலாண்டில் 8.8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.