நிறுத்துங்க.... சாம்சங் கேலக்ஸி நோட் 7 பயன்படுத்துவதை நிறுத்துங்க: சிபிஎஸ்சி(CPSC) எச்சரிக்கை


Sugapriya Prakash| Last Modified சனி, 10 செப்டம்பர் 2016 (16:21 IST)
சாம்சங் கேலக்ஸி நோட் 7 உரிமையாளர்கள் பேட்டரி வெடிப்பின் காரணமாக அதனை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளது.

 
 
இது குறித்து அறிக்கை வெளியிட்ட சிபிஎஸ்சி, சாம்சங் நிறுவனம் நோட் 7 ஸ்மார்ல்போனை திரும்பி பெறும் என்றும், வாடிகையாளர்களுக்கு மாற்று தீர்வு வழங்கப்படும் என்றும், விரைவில் இதற்கு ஏற்கத்தக்க தீர்வு என்பதை தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளது.
 
சாம்சங் பயனர்கள் சிபிஎஸ்சி அனுமதிக்கும் வரையில், பயனர்களுக்கு நோட் 7க்கு பதில் வேறு சாதனத்தை மாற்றி தரும் திட்டத்தை தொடங்க வேண்டும். குறிப்பாக நோட் 7 சாதனங்களை கேரியர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தொலைபேசிகளை வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.
 
சாம்சங் நோட் 7க்கு பதில் கேலக்ஸி S7, அல்லது கேலக்ஸி S7 எட்ஜ் ஸ்மார்ச்போனை பெற்றுக்கொள்ளலாம். மேலும், பரிமாற்றத் திட்டத்தில் பங்கு பெறும் பயனர்கள் $25 பரிசு அட்டை அல்லது மசோதா கடன் பெற முடியும்.


இதில் மேலும் படிக்கவும் :