திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (12:36 IST)

50 கோடி ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள மத்திய அரசு

மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவின் செல்போன் உற்பத்தி 50 கோடியாக அதிகரிக்கும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


 

 
மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பிற நாட்டு செல்போன் நிறுவனங்கள் இந்தியாவிலே உற்பத்தி செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவின் சந்தை மேம்படுவதோடு, வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். ஆப்பிள் நிறுவனம் அண்மையில் மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டு இறுதியில் செல்போன் உற்பத்தி 50 கோடியாக அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தகவல் தொழில்நுட்பத் துறையின் இணைச் செயலாளரான அஜய்குமார் கூறியதாவது:-
 
2014ஆம் ஆண்டு நிதியாண்டில் இந்தியாவில் 6 கோடி செல்போன்கள் தயாரிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை 2016-2017 ஆம் நிதியாண்டில் 17.5 கோடியாக அதிகரித்தது 2020ஆம் ஆண்டில் உற்பத்தி மேலும் அதிகரித்து இதன்மூலம் எண்ணிக்கை 50 கோடியாக உயரும் என்றார்.
 
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஸ்மார்ட்போன் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. தற்போது உள்ள நிலையில் 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் 35% உற்பத்தி அதிகரிக்கும் என்றார்.