Daily Horoscope
✕

ஜியோ, ஏர்டெல்லுக்கு சவால் விடும் BSNL புது பிரீபெயிட் ப்ளான்!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 12 நவம்பர் 2019 (13:03 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புத்ய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 
 
ஆம், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 997 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
 
பிஎஸ்என்எல் வழங்கியுள்ள இந்த ரீசார்ஜ் திட்டம் ஜியொ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏனெனில் ஜீயொ, ஏர்டெல் நிறுவனங்கள் இதே விலையில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் சேவையை வழங்கி வருகிறது. 
 
ஏர்டெல் ரூ. 998-க்கு 336 நாட்கள் வேலி்டிட்டியுடன்  அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 எஸ்.எம்.எஸ். மற்றும் 12 ஜிபி டேட்டா வழங்குகிறது. 
 
ஜியோ ரூ. 999-க்கு 90 நாட்கள் வேலிடிட்டியுடன்,  60 ஜிபி டேட்டா, ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்.ஆகியவற்றை வழங்குகிறது. 

எல்லாம் காட்டு

1 மணி நேரத்தில் 1 கோடி கொள்ளை!.. வங்கி கணக்கை ஹேக் செய்த கும்பல்...

திருச்சி செல்லும் முதல்வர் விஜய்!.. இடைத்தேர்தல்தான் காரணமா?..

முதுமலை காட்டில் டிரக்கிங்!.. சர்ச்சைக்கு விளக்கமளித்த வன்னியரசு...

இம்ரான்கான் மனைவிக்கு கண்பார்வை பறிபோகும் அபாயம்.. சிறையில் இருந்து எழுதிய கடிதத்தால் பரபரப்பு..

என்னாது தெருக்கூத்தாடிகளா?.. இதுதான் பண்ணையார் மனநிலை!.. சேகர்பாபுவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments