1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 நவம்பர் 2019 (14:01 IST)

பைசா வசூலில் ஏர்டெல், வோடபோனை மிஞ்சிய BSNL!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சிம்  கார்டு ரீப்ளேஸ்மென்ட் கட்டணத்தை அதிகமாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 
 
சிம் கார்டு ரீப்ளேஸ்மென்ட்காக அதன் பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் சில ஆபரேட்டர்களில் பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒன்று. அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டு சிம் கார்டு ரீப்ளேஸ்மென்ட் கட்டணத்தை ரூ.50 ஆக குறைத்தது. 
 
இது அடுத்த 90 நாட்களுக்கு நீடிக்கும் என பிஎஸ்என்எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் இதன் கட்டணம் மாற்றப்படவில்லை. எனவே இதன் நிரந்தர விலையாக ரூ.50 இருக்க கூடும் என தெரிகிறது. 
 
இருப்பினும் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா தங்கள் வாடிக்கையாளர்களுக்கான சிம் கார்டு ரீப்பிளேஸ்மென்ட் கட்டணத்தை ரூ.30 என்று நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் ரூ.20 கூடுதலாக ரு.50 கட்டணமாக வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.