பிஎஸ்என்எல் எடுத்த கோக்குமாக்கான முடிவு: தேறுவது கஷ்டம்!

Last Modified செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (13:23 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சில திட்டங்களில் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. 
 
வரம்பற்ற இலவச அழைப்புகளை வழங்கிய முதல் நெட்வொர்க் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. இதனால் வேறு வழியில்லாமல் வாடிக்கையாளர்களை கவர பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் அன்லிமிடெட் இலவச அழைப்புகளை வழங்கியுள்ளது. 
 
இந்நிலையில் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களான ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666 மற்றும் ரூ.1,699 ஆகிய ரீசார்ஜ் திட்டங்களில் இனிமேல் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதனோடு வாடிக்கையாளர்கள் இனி தினமும் 250 நிமிடம் இலவச அழைப்புகளை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று அர்த்தம். குறிப்பிட்ட 250 நிமிடங்கள் என்கிற தினசரி வரம்பு முடிந்ததும், கட்டணம் வசூலிக்கப்படும். 
 
தோறாயமாக கூதல் நிமிடங்களுக்கு 1 பைசா என்கிற விகிதம் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிகிறது. மேலும், இலவசமாக கிடைக்கும் 250 நிமிடங்களை பயன்படுத்தவைட்டால் அது மறுநாள் கணக்கில் சேராது. 


இதில் மேலும் படிக்கவும் :