புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 6 அக்டோபர் 2017 (19:03 IST)

விற்பனையில் களைக்கட்டும் பென்ஸ் காரின் LWB மாடல்

பென்ஸ் நிறுவனத்தில் LWB மாடல் கார் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை அதிக அளவில் விற்பனையானது நிறுவனத்தின் வலுவான வளர்ச்சிக்கு உதவியுள்ளது.


 

 
உலக புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்றான பென்ஸ் நிறுவனம் பல புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவில் பென்ஸ் கார் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் பென்ஸ் கார் நிறுவனத்தின் வளர்ச்சி இந்தியாவில் வலுவான நிலையில் உள்ளது. பென்ஸ் நிறுவனத்தின் LWB மாடல் கார் இந்தியாவில் அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளது. 
 
இதனால் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பென்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி 41 சதவீதம் அதிகரித்துள்ளது. LWB மாடலில் C மற்றும் S class வகைகள் அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளது. அதைவிட E class கார்கள் விற்பனையின் உச்சத்தில் உள்ளது.