வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 8 செப்டம்பர் 2016 (11:06 IST)

ஆப்பிள் நிறுவனம்: ஐ போன் 7, 7 பிளஸ், ஏர்பாட்ஸ், ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்; அப்படி இதில் என்ன தான் இருக்கு???

உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின்  அதிநவீன ஐஃபோன் 7 மற்றும் 7 பிளஸ் ஆகிய இரண்டு போன்களையும் மேலும் ஏர்பாட்ஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்சை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.


 
 
ஆப்பிள் ஐ போன் 7 மற்றும் 7 பிளஸ்:
 
புதிய ஐ ஃபோனில், ஹோம் பட்டனில் எந்த அளவுக்கு அழுத்தம் தரப்படுகிறது என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்றபடி அதிர்வு (வைப்ரேஷன்) அடிப்படையிலான பதில்களைத் தரும்.


 

 
ஐ போன் 7 சிறப்பு அம்சங்கள்:
 
32ஜிபி, 128ஜிபி மற்றும் 256ஜிபி என்று மூன்று வகை ஸ்டோரேஜ்களில் கிடைக்கும்.
 
பின்புறம் 12 மெகா பிக்ஸலில் இரண்டு லென்ஸ் கொண்ட கேமரா உள்ளது. ஆப்டிகல் ஜூமிற்காக ஒரு லென்சும், வைடு ஆங்கிளுக்காக மற்றொரு லென்சும் பொருத்தப்பட்டுள்ளது.
 
25 சதவிகிதம் அதிக ப்ரைட்னஸ், கலர் மேனேஜ்மென்ட்,மற்றும் 3டி டச் வசதி கொண்டது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், வாட்டர் ரெஸிஸ்டன்ட் என்பது இந்த புதிய ரக போனின் பெரிய ப்ளஸ்.
 
ஐஃபோன் 7 பிளஸ் சிறப்பு அம்சங்கள்:
 
ஐ போன் 7 பிளஸ், பின்புறம், ஒய்ட் ஏங்கிள் மற்றும் டெலிஃபோட்டோ ஆகிய இரண்டு லென்ஸ்களுடன் கூடிய கேமராவை வழங்குகிறது. 
 
இதன் மூலம், படத்தின் தரம் குறையாமல் குளோஸப் காட்சி எடுக்கவும், முன்பிருந்ததை விட 10 எக்ஸ் ஜூம் பொருத்தவும் வழியேற்படுத்துகிறது. 
 
கேமரா செயலி மூலம் புகைப்படங்களை கிராப் செய்து கொள்ள முடியும்.
 
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், ஒலியளவு ஐஃபோன் 6-ஐ விட இருமடங்காக இருக்கும்.
 
வண்ணங்கள், விலை:
 
ஐஃபோன் 7 மற்றும் 7 பிளஸ் ஆகிய இரண்டு ஃபோன்களும் சில்வர், கோல்டு, ரோஸ் கோல்டு, பிளாக் மற்றும் ஜெட் பிளாக் என்று ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. 
 
இதன் விலை இந்திய மதிப்பில் 43 ஆயிரம் மற்றும் 56 ஆயிரமாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.
 
அதிக நேரம் சார்ஜ் நீடிக்கும் வகையில் பேட்டரி வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
சுமார் 30 நிமிடங்கள் வரை, 3.2 அடி ஆழமுள்ள தண்ணீரில் போடலாம். எந்த பாதிப்பும் ஏற்படாது.
 
ஆப்பிள் ஏர்பாட்ஸ்:
 
ஒயர் இல்லாத, ஏர்பாட்ஸ் என்ற கூறப்படும் காதில் பொருத்திக் கேட்கும் புதிய சாதனத்தையும் ஆப்பிள் வெளியிட்டுள்ளது.


 

 
ஏர்பாட் சாதனத்தை காதுகளில் இருந்து எடுத்துவிட்டால், இசை தானாக நின்றுவிடும் என்றும் தெரிவிக்கிறது.
 
இதன் மூலம் வழக்கமான ப்ளூடூத் ஹெட்செட்களைவிட, ஒயர் இல்லாத சாதனங்களை விரைவில் இணைக்க முடியும்.
 
159 அமெரிக்க டாலர் அல்லது 119 பவுண்டு மதிப்புடையது ஏர்பாட் கருவிகள்.
 
ஏர்பாட் சார்ஜ் செய்தபிறகு, ஐந்து மணி நேரத்துக்கு நீடிக்கும்.
 
ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்:
 
ஆப்பிள் தனது புதிய கைக்கடிகாரத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.





 

 
ஆப்பிள் வாட்ச் 2 கைக்கடிகாரத்தை 164 அடி ஆழம் வரை தண்ணீருக்குள் கொண்டு செல்லலாம். 
 
ஆப்பிள் வாட்சில் போக்கிமான் கோ கேம். மேலும் ஜிபிஎஸ் வசதியுடன் புதிய செயலிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.