1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 23 ஜூன் 2017 (10:44 IST)

ரூ.45,000 கோடி கடன்: நெருக்கடியில் அனில் அம்பானி!!

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.


 
 
தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கால்பதித்துள்ளது. தற்போது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.45,000 கோடி கடன் உள்ளதாக தெரியவந்துள்ளது.
 
மேலும், இந்த தொகையை வரும் டிசம்பர் மாதத்திற்குள் திருப்பி அளிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாவும் தெரிகிறது.
 
ஏர்செல் மற்றும் ப்ரூக்ஃபீல்டு ஆகிய நிறுவனங்களுடன் செய்துள்ள ஒப்பந்தங்களால் நிறுவனத்தின் 60% கடன் குறையும் என அனில் அம்பானி ஏதிர்பார்க்கிறாராம்.
 
மேலும், நடப்பு நிதியாண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சேர்மனாக அனில் அம்பானி, சம்பளம் இன்றி வேலை செய்ய போவதாகவும் அறிவித்துள்ளாராம்.