1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (18:02 IST)

ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட்போன்: லம்போர்கினி நிறுவனம் அறிமுகம்!!

கார் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற லம்போர்கினி நிறுவனம் ஆல்ஃபா ஒன் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. 


 
 
இதற்கு முன்னர் லம்போர்கினி நிறுவனம் ரூ.4 லட்சம் விலையில்  88 தவ்ரி என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
 
லம்போர்கினியின் இந்த ஸ்மார்ட்போன் கார் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நீர்ம உலோகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 
# 5.5 அங்குல WQHD டச் ஸ்கிரீன் பெற்றிருக்கிறது. குவால்காம் ஸ்நாப்டிராகன் 820 பிராசசர் பொருத்தப்பட்டுள்ளது.
 
# 4ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக 128 ஜிபி வரை ஸ்டோரேஜை நீட்டிக்கலாம்.
 
# 20 மெகா பிக்சல் பின்புற கேமராவும், 8 மெகா பிக்சல் செல்பி கேமராவும் பெற்றுள்ளது.
 
# ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், டூயல் சிம் கார்டு வசதி, 3,250 எம்ஏஎச்  பேட்டரி திறன் கொண்டுள்ளது.
 
# இந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் என இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.