வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2017 (20:43 IST)

எல்ஜி பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்: முழு விவரம் உள்ளே...

எல்ஜி நிறுவனத்தின் புதிய K8 மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் எல்ஜி-யின் அதிகாரப்பூர்வ இனையதளத்தில் வெளியாகியுள்ளது.


 
 
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட எல்ஜி K8 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக அமைந்துள்ளது இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போன்.
 
சிறப்பம்சங்கள்:
 
# 5.0 இன்ச் 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே, 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்,
 
# 2 ஜிபி ராம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் சிம் ஸ்லாட், 
 
# 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா,
 
# 2500 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டுள்ளது,
 
# கோல்டு மற்றும் ப்ளூ நிறங்களில் கிடைக்கிறது,
 
# 4ஜி வோல்ட், கேமரா சென்சாரின் கீழ் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.   
 
இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆஃப்லைன் விற்பனை குறித்து எல்ஜி சார்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.