திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2017 (21:44 IST)

ஜியோ பக்கம் சாய்ந்த டிராய்: ஏர்டெல், ஐடியா, வோடபோன் அதிருப்தி!!

இண்டர்கனக்ட் கட்டணங்களை வசூலிக்கும் பிரச்சனையில் டிராய் ஜியோவை ஆதரித்துள்ளதால், போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா அதிருப்தியில் உள்ளன.


 
 
இந்த இண்டர்கனக்ட் கட்டணத்தை அதிக அளவில் வசூலிப்பதாக ஜியோ ஏர்டெல் மீது புகார் தெரிவித்திருந்தது. மேலும், இண்டர்கனக்ட் கட்டணம் தேவையில்லை எனவும் கோரிக்கை வைத்தது.
 
லேண்டு லைன் - மொபைல் மற்றும் மொபைல் - லேண்டு லைன் அழைப்புகளுக்கு இண்டர்கனக்ட் கட்டணங்கள் ஏதும் இல்லை. அதேபோல் மொபைல் - மொபைல் அழைப்புகளுக்கும் இண்டர்கனக்ட் கட்டணங்கள் வேண்டியதில்லை என தெரிவித்தது. 
 
இந்நிலையில், ஒரு அழைப்பைன் இணைக்க 14 பைசாவாக இருந்த இண்டர்கனக்ட் கட்டணம் 6 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இண்டர்கனக்ட் கட்டண முறை வருகின்ற அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று டிராய் தெரிவித்துள்ளது.
 
மேலும், இந்த கட்டணத்தை தவிக்கபும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனால் ஏர்டெல் மற்றும் சில போட்டி நிறுவனங்கள் அதிருப்தியில் உள்ளன.