70 நாட்களுக்கு 70 ஜிபி; ஜியோவை மிஞ்சிய ஏர்டெல்


Abimukatheesh| Last Updated: திங்கள், 17 ஏப்ரல் 2017 (19:42 IST)
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம், ரூ.244க்கு தினமும் 1 ஜிபி விதம் 70 நாட்களுக்கு 70 ஜிபி வழங்க திட்டமிட்டுள்ளது.

 

 
ஜியோவுக்கு எதிராக ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் அதிரடி சலுகை வழங்கியதை அடுத்து ஜியோ தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள ரூ.309க்கு 3 மாதம் இலவச கால்ஸ் மற்றும் டேட்டா வழங்கியது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தற்போது அதிரடியான சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த சலுகை ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். 
 
ரூ.244க்கு தினமும் 1 ஜிபி முதல் 70 நாட்களுக்கு 70 ஜிபி மற்றும் வாரம் 1200 நிமிடங்கள் இலவச வாய்ஸ் கால்ஸ் இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த சலுகை 4ஜி ஸ்மார்ட்போன் மற்றும் 4ஜி சிம் வைத்திருப்போருக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :