திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 25 ஏப்ரல் 2018 (11:30 IST)

ஜியோ போட்டியை சமாளிக்க முடியாமல் திணறும் ஏர்டெல்! ஏர்செல் கதி ஏற்படுமா?

இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், ஜியோவுக்கு முன் வரை போட்டியே இன்றி வெற்றிநடை போட்டு வந்த நிலையில் ஜியோவின் வருகைக்கு பின் லாபம் பெற திணறி வருகிறது. இந்த நிறுவனத்தின் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டு வருமானம் சுமார் 78% அளவு குறைந்துள்ளதாகவும், இந்த வருமானம். கடந்த 15 ஆண்டுகளில் மிகக்குறைந்த லாபம் என்றும் கூறப்படுகிறது.. ஜியோ போட்டி காரணமாக குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கி வருவதால் ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் குறைந்ததற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
 
கட்ந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் வெறும் ரூ.82.9 கோடியாக மட்டுமே உள்ளது. இந்த லாபம் வழக்கத்தைவிட  77.8 சதவிகிதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 2003ஆம் ஆண்டு ஏப்ரல் - ஜூன் காலாண்டிற்கு பின்னர் 15 ஆண்டுகளுக்கு பின் இந்நிறுவனம் பெறும் குறைந்த லாப சதவிகிதம் இதுதான்.
 
ஜியோ போட்டியை சமாளிக்க முடியாமல்தான் ஏர்செல் நிறுவனம் சேவையை நிறுத்தி கொண்டது. இந்த நிலையில் ஏர்டெல் ஏதாவது புதிய முயற்சிகள் மற்றும் திட்டங்களை அறிவித்து ஜியோ போட்டியை சமாளிக்கும் நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் ஏர்செல் நிலை தான் ஏர்டெல்லுக்கும் ஏற்படும் என்று கூறப்படுகிறது.