1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash

கடன் நெருக்கடி: இழுத்து மூடப்படும் ஏர்செல் நிறுவனம்??

கடன் நெருக்கடி காரணமாக ஏர்செல் நிறுவனம் மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 
 
கடந்த செப்டம்பர் மாதம் அனில் அம்பானியில் ஆர்காம் நிறுவனத்துடன் ஏர்செல் நிறுவனம்
இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

 
ஆனால், இந்த இணைப்பு திட்டம் சில காரணங்களால் பின்வாங்கப்பட்டது. இந்நிலையில், 75 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஆர்காம் நிறுவனம் வாய்ஸ் கால் சேவையை நிறுத்த முடிவு செய்தது. 
 
இதனையடுத்து தற்போது, ஏர்செல் நிறுவனம் மூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்கனவே போட்டி வலிமை அதிகரித்துள்ளது. 
 
அதோடு ஏர்செல் நிறுவனத்திடம் தற்போதைய சந்தைக்கு ஈடுகொடுக்கும் வகையில் 4ஜி அலைக்கற்றைகள் இல்லை. புதிய 4ஜி அலைக்கற்றைகளை வாங்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 
 
எனவே, வேறுவழியின்றி தனது 8 கோடியே 90 லட்சம் வாடிக்கையாளர்களை ஒரு நிறுவனத்துக்கும் 40 ஆயிரம் டவர்களை வேறு நிறுவனத்துக்கும் விற்க ஏர்செல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.