டாட்டா காட்டிய டாடா மோட்டார்ஸ்; உற்பத்தியை நிறுத்துவதாக அறிவிப்பு!

Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (12:02 IST)
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டாடா சுமோ காரின் உற்பத்தியை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. 
 
கடந்த 1994 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த டாடா சுமோ கடந்த 25 ஆண்டுகளாக உற்பத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது இதன் உறபத்தி நிறுத்திக்கொள்வதாகவும், இனி நாடு முழுந்த எந்த டாடா விற்பனையகத்திலும் சுமோ விற்பனைக்கு வராது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள ஏ.ஐ.எஸ். 145 பாதுகாப்பு விதிகள் மற்றும் புதிய வாகன பாதுகாப்பு திட்டம் போன்ற புதிய பாதுகாப்பு விதிகளுக்கு சுமோ பொருந்தாததால், இதன் உற்பத்தி நிறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காரணத்தால்தான் ஆம்னி கார்களின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
ரூ.7.39 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.8.77 லட்சம் என நிர்ணயிக்கப்பட்ட விலையில் டாடா சுமோ சீரிசில் கடைசியாக சுமோ கோல்டு மாடல் விற்பனைக்கு வந்தது என்பது கூடுதல் தகவல். 


இதில் மேலும் படிக்கவும் :