வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (16:12 IST)

ஜியோவின் இலவச சேவையால் ரூ.4600 கோடி நஷ்டம்; கதறும் ஏர்டெல், ஐடியா, வோடாபோன்

ஜியோ அறிமுக செய்த பின் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களாக ஏர்டெல், ஐடியா மற்றும் வோடாபோன் பெரும் நஷ்டத்தை சந்துள்ளன.


 

 
ஜியோவின் வருகைக்கு பிறகு டெலிகாம் நிறுவனங்களின் வருடாந்திர வருமானம் முதல் முறையாக குறைந்துள்ளது. அடுத்த நிதியாண்டில் மேலும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜியோவின் இலவச சேவையால் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தத்தோடு வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பல அதிரடி சலுகைகளை அறிவித்தனர். இதனால் 70 முதல் 80 சதவீதம் வரை கட்டணங்கள் குறைக்கப்பட்டது. அதோடு டிராய் அமைப்பிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தன. இதனால் ஜியோவின் சம்மர் ஆஃபர் ரத்தானது குறிப்பிடத்தக்கது. 
 
டெலிகாம் சந்தையில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் சுமார் ரூ.4600 கோடி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைப்பில் ஈடுபட்டு வருகிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் - ஏர்செல், ஜடியா - வோடபோன் ஏர்டெல் - டெலிநார் ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளது.