டெல்லியில் புகைமூட்டம் சூழ்ந்ததால் மோதிக்கொண்ட வாகனங்கள்; வைரல் வீடியோ

Delhi
Abimukatheesh| Last Updated: வியாழன், 9 நவம்பர் 2017 (18:45 IST)
டெல்லியில் காற்று மாசு காரணமாக புகைமூட்டம் சூழ்ந்ததால் சாலையில் வாகனங்கள் மோதிக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

 

 
உலகில் மாசால் பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி முன்னிலை வகித்து வருகிறது. டெல்லியில் ஆண்டுதோறும் காற்றும் மாசு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று காற்று மாசு கடுமையாக இருந்ததால் நகரமே புகைமூட்டமாக இருந்தது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
 
காற்று மாசு காரணமாக புகைமூட்டம் சூழ்ந்துள்ளதால் சாலையில் சென்ற வாகனங்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதிக்கொண்ட. இந்த சம்பவத்தை வீடியோவாக ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 
 


இதில் மேலும் படிக்கவும் :