குரூப் IV: 5451 பணியிடங்கள்


Abimukatheesh| Last Modified செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (14:55 IST)
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் IV பிரிவில் 5451 பணியிடங்கள் நிறப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

 
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் IV பிரிவில் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு-3, நில அளவர், வரைவாளர் போன்ற பதவிகளில் 5451 பணியிடங்கள் நிறப்பட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 8. www.tnpscexams.net/www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.09.2016, தேர்வு நடைபெறும் தேதி: 06.11.2016. 
 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய //www.tnpsc.gov.in/notifications/2016_15_not_tam_grp_iv_services.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :