அபுதாபி நிறுவனத்திற்கு அனுபவம் உள்ள கார்பெண்டர்கள் தேவை

Annakannan| Last Modified செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (14:37 IST)
அபுதாபியிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு ஐடிஐ தேர்ச்சியுடன் 6 வருட பணி அனுபவம் பெற்ற சட்டரிங் கார்பெண்டர்கள், ஸ்டீல் பிக்ஸ்சர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்ற உதவி சட்டரிங் கார்பெண்டர்கள், உதவி ஸ்டீல் பிக்ஸ்சர்கள்
பெருமளவில் தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இருப்பிடம், மருத்துவக் காப்புறுதி, மிகைநேரப் பணி ஊதியம் ஆகியவை வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள், மற்றும் நீலநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகம், எண்.42, ஆலந்தூர் ரோடு, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்புநிறுவனத்திற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களை, 044-22505886 / 22502267 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவோ, அல்லது www.omcmanpower.com என்ற இணையத் தளத்திலோ அறியலாம்.இதில் மேலும் படிக்கவும் :