1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. வாய்ப்புகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 19 டிசம்பர் 2015 (15:17 IST)

எல்.ஐ.சியில் 700 உதவி நிர்வாக அதிகாரிகள் பணியிடங்கள்

எல்.ஐ.சியில் 700 உதவி நிர்வாக அதிகாரிகள் பணியிடங்கள்
உதவி நிர்வாக அதிகாரி என்ற பொறுப்பில் 700 பணியிடங்களுக்கான அறிவிக்கையை எல்.ஐ.சி வெளியிட்டிருக்கிறது.
 

 
எல்.ஐ.சி.யில் (ஆயுள் காப்பீட்டுக் கழகம்) அதிகாரியாகப் பணிபுரிவதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. பணியில் அமர்ந்தவுடன், ஏ பிரிவு நகரங்களில் அமர்த்தப்பட்டால், சுமார் 40 ஆயிரம் ரூபாய்(இதர சலுகைகள் தனி) மாத ஊதியமாகக் கிடைக்கும்.
 
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு
 
வயது : - 21 வயது முதல் 30 வயது [டிசம்பர் 1, 2015 கணக்கீடு]. (இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தளர்ச்சி உண்டு).
 
விண்ணப்பிக்கும் காலம்: 15.12.2015 முதல் 05.01.2016 வரையில்.
 
தேர்வுத்தேதி: 5, 6 மற்றும் 13 மார்ச் 2016 (உத்தேசத் தேதிகள்).
 
விண்ணப்ப கட்டணம்:
 
எஸ்.சி./எஸ்.டி./மாற்றுத்திறனாளிகளுக்கு - 100 ரூபாய்
மற்ற அனைவருக்கும் - 600 ரூபாய்
 
தேர்வுக்கான விண்ணப்பங்களை http://www.licindia.in/ என்ற இணையத்தள முகவரிக்கு சென்ற விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
 
ஏற்கனவே வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும். கூடுதலான பொது அறிவுத் தகவல்களைப் படிக்க வேண்டியது அவசியமானதாகும்.
 
அறிவிப்பை பார்க்க...... [கிளிக் செய்யவும்]
 
விண்ணப்பிக்க....... [கிளிக் செய்யவும்]