ஓமன் நாட்டு நிறுவனத்திற்கு ஆண் மருந்தாளுநர்கள் தேவை

Annakannan| Last Modified செவ்வாய், 14 அக்டோபர் 2014 (11:51 IST)
ஓமன் நாட்டிலுள்ள மருந்தக நிறுவனத்திற்கு ஆங்கிலப் புலமையுடன் மற்றும் புரோமெட்ரிக் தேர்வு முடித்த 30 முதல் 35 வயதிற்கு உட்பட்ட ஆண் மருந்தாளுநர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்குத் தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் ஓமன் நாட்டின் தொழிலாளர் சட்ட திட்டத்திற்கு உட்பட்ட மருத்துவ வசதியும் அளிக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணிக்கு விருப்பமும் தகுதியும் இருப்பின் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் எண்.42, ஆலந்தூர் சாலை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியிலுள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு தபால் மூலமோ அல்லது [email protected] என்ற மின்னஞசல் முகவரிக்கோ 17.10.2014 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்கள் அறிய 044-22502267 / 22505886 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது
www.omcmanpower.com என்ற இணையதளத்திற்குச் சென்றும் அறியலாம்.

இதனைத் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :