சென்னை மின்கம்பியாள் உதவியாளர் பணிக்கான தகுதித் தேர்வு

Ashok| Last Modified திங்கள், 19 அக்டோபர் 2015 (19:58 IST)
சென்னை அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்கம்பியாள் தகுதித் தேர்வு நவம்பர் 28, 29 ஆம் தேதிகளில்
நடைபெறுகிறது என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இந்த பணிக்குறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவித்திருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்கம்பியாள் உதவியாளருக்கான தகுதிகாண் தேர்வு நவம்பர் 28, 29 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையால் நடத்தப்படும் மின்கம்பியாள் உதவியாளருக்கான தகுதித் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு 21- 40 ஆகும்.

இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் அக்டோபர் 16 முதல் நவம்பர் 5 வரை, அம்பத்தூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. படிவத்தின் விலை ரூ. 10.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 5 ஆம் தேதியாகும்.

இந்த பணிக்குறித்து மேலும் விவரங்களுக்கு, 044 26252453 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.இதில் மேலும் படிக்கவும் :