ஹைதராபாதில் உள்ள ஐஐடி-யில் வேலை வாய்ப்பு

iit hyderabad" width="600" />
Ashok| Last Updated: திங்கள், 21 செப்டம்பர் 2015 (14:24 IST)
இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாக ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் நெட் ஒர்க் பொறியாளர், சிஸ்டம் பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

 
நெட் ஒர்க் பொறியாளர் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.14,000 - 30,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பி.டெக், பி.இ, எம்சிஏ, ஐடி, இஇ, இசிஇ, சிஎஸ் அல்லது எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்எஸ் ஐடி போன்ற பட்டப்படிப்பில், ஏதாவதொன்றில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சிஸ்டம் பொறியாளர் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.14,000 - 30,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கும் பிஇ, பி.டெக், எம்சிஏ, சிஎஸ், ஐடி, இஇ, இசிஇ அல்லது எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்சி கம்ப்யூட்டர், எம்எஸ்சி ஐடி போன்ற பட்டப்படிப்பில், ஏதாவதொரு துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் 09.09.2015 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் நேரில் கலந்துகொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு குறித்து Indian Institute of Tecnology Hyderabad, ISAC-NOC, Ordnance Factory Estate Campus, Yeddumailaram, India - 502205 அல்லது [email protected] என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
 
மேலும், இது குறித்து முழுமையான விவரங்கள் அறிய https://www.iith.ac.in/recruitment/pdf%20files/ISAC-TechnicalStaff-Aug2015.pdf என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்
 


இதில் மேலும் படிக்கவும் :