இஎஸ்ஐ மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு

Ashok| Last Updated: திங்கள், 5 அக்டோபர் 2015 (20:08 IST)
தமிழ்நாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மாற்றுத்திறனாளிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்குரிய துணை மருத்துவ பணியிடங்களை நிரப்ப தமிழ்நாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை அறிவிப்பு வெளிட்டுள்ளது.

Nursing Orderly
- 03

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 31.10.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் முதலுதவி தொடர்பான பணி அனுபவம் மற்றும் 2 வருட நர்சிங் உதவியாளர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Dresser - 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 31.10.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலும்பு முறிவு மருத்துவமனையில் 2 வருட நர்சிங் உதவியாளர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Cook Mate
- 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 31.10.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்திய உணவு வகைகளை சமைப்பதில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

பணி: Laundry Operator - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 31.10.2015 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது சலவை தொழிலில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Steward - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 31.10.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Catering and Kitchen Management-ல் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Medical Social Worker - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 31.10.2015 தேதியின்படி 37க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சமூக சேவை பாடப்பிரிவில் பட்டம் அல்லது பட்டயம் முடித்திருக்க வேண்டும். குடும்பகட்டுப்பாடு, சுகாதாரக் கல்வி, சுகாதாரம் சார்ந்த சமூக சேவை பணிகளில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: www.esichennai.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:


Medical Superintendent,
ESIC Hospital,

Ashok Pillar Road,
KK.Nagar,
Chennai - 600078.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 31.10.2015

மேலும் விவரங்களுக்கு www.esichennai.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :