கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு


Ashok| Last Updated: புதன், 25 நவம்பர் 2015 (22:15 IST)
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 
பணி: Technician
 
காலியிடங்கள்: 10
 
தகுதி: 60 சதவீத தேர்ச்சியுடன் +2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200.
 
பணி: Scientific officer
 
காலியிடங்கள்: 03
 
தகுதி: எம்பிபிஎஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், குறைந்தபட்சம் ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100.
 
விண்ணப்பக் கட்டணம்: Account officer, GSO, Kalpakkam என்ற பெயருக்கு ரூ.50-க்கான வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
 
Administratvie officer-III, Department of atomic energy general service organization, Kalpakkam.
 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் நாள்: 30.11.2015.
 
இதுகுறித்து விண்ணப்பிக்கும் முறைக குறித்து முழுமையான விவரங்கள் அறிய www.igcar.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
 


இதில் மேலும் படிக்கவும் :