மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் ஓட்டுநர் பணி

Ashok| Last Updated: திங்கள், 5 அக்டோபர் 2015 (19:41 IST)
சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி பெயர்: கான்ஸ்டபிள்/ தீயணைப்புத்துறை ஓட்டுநர்கள்

காலியிடங்கள்: 156

பணியிடம்: சென்னை

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹெவி, லைட் மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 03.10.2015 தேதியின்படி 20 - 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் இல்லை.

//www.cisf.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

DIG, CISF (South Zone) Rajaji Bhavan,
"D" Block, Besant Nagar,
Chennai,
Tamilnadu-600090.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 10.10.2015


இதில் மேலும் படிக்கவும் :