வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. வாய்ப்புகள்
Written By Ashok
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2015 (12:26 IST)

திருச்சி பெல் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

திருச்சியில் இயங்கி வரும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் என்ற பெல் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.
 
திருச்சி நகரின் முக்கிய அடையாளமாக திகழும் பெல் நிறுவனம் 40 வருடங்கள் இயங்கி வருகின்றது. மேலும் இந்தியாவின் ஹெவி எலக்ட்ரிக் எக்விப்மென்ட்ஸ் பிரிவில் மிகவும் பெயர் பெற்ற பெல் நிறுவனம் 1971 முதல் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தில் தற்போது டிரேட்ஸ் -வெல்டர் பிரிவில் காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டிரேட்ஸ் - வெல்டர் பிரிவில் 50 இடங்களும், டிரேட்ஸ் - பிட்டர் பிரிவில் 150 இடங்களும் சேர்த்து மொத்தம் 200 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என பெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
கல்வித் தகுதி:

பெல் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நேஷனல் டிரேடு சர்டிபிகேட் (என்.டி.சி.,) மற்றும் நேஷனல் அப்ரென்டிஸ்ஷிப் சர்டிபிகேட் (என்.ஏ.சி.,) படிப்புகளை பிட்டர் அல்லது ஷீட் மெட்டல் ஒர்க்கர் மற்றும் வெல்டர் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முடித்திருக்க வேண்டும்.
 
விண்ணப்பக் கட்டணம்:

ரூ.125/- ஐ Power Jothi Ac. No. 30796267034 என்ற பாரத ஸ்டேட் வங்கி கைலாசபுரம், திருச்சி - 14 கிளையின் அக்கவுண்ட் எண்ணில் Bharat Heavy Electricals Limited, Tiruchy -14 என்ற பெயரில் டிரிப்ளிகேட் சலான் மூலமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
 
தேர்ச்சி முறை:

திருச்சியில் அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி இருக்கும் என்று தெரிகிறது. தேர்வுக்கான கேள்விகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும்.
 
http://careers.bhel.in/rectry2015/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னர் கிடைக்கும் அக்னாலெட்ஜ்மென்ட் சிலிப்பை உரிய இணைப்புகளுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Sr.Deputy General Manager 1 HR(R & W) 
HRM Department, Building No.24 
Bharat Heavy Electricals Limited, 
Tiruchirappalli- 620 014.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.09.2015
பதிவுச்சீட்டு கிடைக்க இறுதி நாள்: 07.10.2015