1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. செ‌ய்‌திக‌ள்
Written By Ashok
Last Updated : திங்கள், 28 செப்டம்பர் 2015 (10:39 IST)

ராணுவப் பள்ளிகளில் 7 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி

மத்திய கல்வி பாடத் திட்டத்தின்படி(CBSE) இராணுவ பொது நலக் கல்வி அமைப்பின் கீழ் (Army Welfare Education Society) இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 135 ராணுவப் பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால் அப்பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 7,000
 
பணி: PGT (Post Graduate Teacher)
 
தகுதி: ஆங்கிலம், ஹிந்தி, வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், உளவியல், உடற் கல்வியியல், கம்பியூட்டர் சயின்ஸ் போன்ற துறைகளில் முதுகலை மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
 
பணி: TGT (Trained Graduate Teacher)
 
தகுதி: ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற துறையில் இளங்கலை மற்றும் பி.எட் முடித்து மத்திய, மாநில அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
பணி: PRT (Primary Teacher)
 
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்புடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
 
வயதுவரம்பு: 01.04.2016 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
 
தேர்வு கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம்.
 
விண்ணப்பிக்கும் முறை: http://awes-csb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2015
 
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி: 23.12.2015
 
தேர்வு முடிவுகள் http://awesindia.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
 
மேலும் முழுவிவரங்கள் அறிய http://awes-cbs.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.