வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. செ‌ய்‌திக‌ள்
Written By Caston
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2016 (13:49 IST)

17,140 பணியிடங்கள் காலி: பாரத் ஸ்டேட் வங்கி வெளியீடு

பாரத் ஸ்டேட் வங்கியில் இளநிலை உதவியாளர் பணிக்கு 17,140 பணியிடங்கள் உள்ளன. இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணபிக்க கடைசி நாள் ஏப்ரல் 25-ஆம் தேதி.


 
 
பாரத் ஸ்டேட் வங்கியில் இளநிலை இணை உதவியாளர் பணிக்கு 10 ஆயிரத்து 726 இடங்களும், இளநிலை இணை வேளாண்மை உதவியாளர் பணிக்கு 3 ஆயிரத்து 8 இடங்களும், சிறப்பு இளநிலை இணை உதவியாளர் பணிக்கு 3 ஆயிரத்து 218 இடங்களும், மேகாலயா மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கு 188 இடங்களும் உள்ளன. மொத்தம் 17 ஆயிரத்து 140 காலிப்பணியிடங்கள் உள்ளன.
 
வேளாண்மை உதவியாளர் பணிக்கு விவசாய பட்டப்படிப்பு மற்ற பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பணியில் சேரும் போது, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
 
பணிக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 20 வயது, அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். சமூகப்பிரிவுகளுக்கு, முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பு உண்டு.
 
தேர்வு கட்டணம் ரூ.600, ஆதிதிராவிடர்களுக்கான கட்டணம் ரூ.100 விண்ணப்பக் கட்டணத்தை இணையதளம் மூலமாக தான் செலுத்த வேண்டும். பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
 
முதன்மை தேர்வு அடுத்த மாதம் 11ஆம் தேதியும், மெயின் தேர்வு 17ஆம் தேதியும் நடக்கவுள்ளது. விண்ணப்பித்தவர்கள் தேர்வு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன் ஹால் டிக்கெட்டை பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.