பாஜக கூட்டணியில் தொடர்ந்து சிக்கல் - பாமக வெளியேற முடிவு?

Webdunia| Last Updated: வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (17:53 IST)
சேலம், திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர்களை வாபஸ் பெற முடியாது என்று பிடிவாதமாக இருப்பதால், பாஜக கூட்டணியில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இன்றிரவுக்குள் பிரச்சனை முடிவுக்கு வராவிட்டால், கூட்டணியிலிருந்து பாமக வெளியேறும் என தெரிகிறது.
 
FILE

பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, ஐஜேகே, கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம் பெற்றன. இக்கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பாஜக குழு பல நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. கூட்டணி உடைந்து விட்டது என்று கூறும் அளவுக்கு, தேமுதிகவும், பாமகவும் தன்னிச்சையாக வேட்பாளர்களையும் அறிவித்தன.

இதன்பின்பும், பாஜக மாநில நிர்வாகிகள் விடா முயற்சியுடன் இரு கட்சியினரிடமும் சமரசம் பேசினர். நேற்று முன்தினம் இரவில், திடீரென பாஜக தரப்பில் தொகுதி பங்கீட்டு சிக்கல் தீர்ந்து விட்டதாகவும் விரைவில் தொகுதிகள் பற்றிய அறிவிப்பு வரும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், கூட்டணியில் நேற்று மீண்டும் பிரச்சனை வெடித்தது. தேமுதிக, பாமக கட்சிகள் சில தொகுதிகளை விட்டு தர முடியாதென பிடிவாதம் செய்தன. தேமுதிகவுக்கு திருவண்ணாமலை, சேலம் உள்பட 14 தொகுதிகளும், பாமகவுக்கு தர்மபுரி, அரக்கோணம், ஆரணி, சிதம்பரம்(தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம்(தனி), கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய 8 தொகுதிகளும் ஒதுக்குவதாக முடிவெடுத்தனர். இதையடுத்து, திருவண்ணாமலை, சேலம் தொகுதிகளை தங்களுக்கே தர வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளிடம் பாமகவினர் கோரினர். சேலம் தொகுதியில் சுதீஷ் போட்டியிட உள்ளதால், அந்த தொகுதி தங்களுக்கே வேண்டும் என்று விஜயகாந்தும் பிடிவாதம் பிடித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :