புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அமுக்கிரா கிழங்கு எந்த நோய்களுக்கு பயன் தருகிறது தெரியுமா....!!

உடலுக்கு ஊட்டமளித்து சக்தியையும், மனதிற்கு உற்சாகத்தையும் இது வழங்குகிறது. இந்த கிழங்கு கசப்பு சுவை கொண்டது. வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா சிறந்த மருந்து.  பலகீனமான உடலுக்கு இது தெம்புதரும். 
அமுக்கிரா கிழங்கை பொடி செய்து நெய்யுடன் சேர்த்து பயன்படுத்தினால் உடல் உறுதி அழகு, நீண்ட ஆயுள் பெறலாம். அமுக்கிரா கிழங்கை பச்சையாக எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்து கொதிக்கவைத்து இடுப்பு வலிக்கு பற்றிடலாம்.
 
அமுக்கிரா கிழங்கை சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போட வீக்கம் கரையும்.
 
கிழங்கை பாலில் வேக வைத்து அலம்பி உலர்த்தி பின் பொடி செய்து, ஒரு வேளைக்கு 2-4 கிராம் வரை தேனில் கொடுக்க உடல் பருமன், வீக்கம், பசியின்மை நீங்கும்; நெய்யில் கொடுக்க உடலிற்கு வலிமை தரும்.
 
அமுக்கிரா கிழங்கு பொடி 1 பங்கு, கற்கண்டு 3 பங்கு என சேர்த்து, காலையும் மாலையும் பசுவின்பாலுடன் 4கிராம் சேர்த்து சாப்பிட்டு வர,  நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
 
மன உளைச்சலில் இருந்து விடுதலை தரும். மூளை செல்களை தூண்டி அதிக புத்துணர்ச்சியை வழங்கும். இதய துடிப்பை சீராக்கும். 
 
அமுக்கிரா கிழங்கு மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் அழற்ச்சி, வயோதிகம், போன்றவற்றில் இருந்து மூளை விடுபட  பெரிதும் உதவுகின்றது. 
 
சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து கலந்து சாப்பிட்டால் விந்து பெருகும். குழந்தை பேரு இல்லாதவர்கள் இதை பொடி செய்து  தேனுடன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேரு உண்டாகும்.